மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் முக.
ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று காலை 10: 00 மணி அளவில், ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, நெமிலிச்சேரி ஊராட்சி, தேவி நகர் மற்றும் கருணாகரசேரி ஊராட்சி ராமாபுரத்தில் ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சாமு நாசர் முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சுமார் ரூ47 லட்சம் மற்றும் 39. 61 லட்சம் மதிப்பில் புதிய சாலைக்கான அடிக்கல் நாட்டினார். மேலும் கருணாகரசேரி ஊராட்சியில் சுமார் ரூ13. 5 லட்சம் மதிப்பில் மேல்நிலை தண்ணீர் தொட்டி மற்றும் ரூ4. 35 லட்சம் மதிப்பில்உயர்மின் கோபுர விளக்கு பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார்.