மனைவிக்கு கொலை மிரட்டல்: காவலா் பணிநீக்கம்

590பார்த்தது
மனைவிக்கு கொலை மிரட்டல்: காவலா் பணிநீக்கம்
மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த முதல்நிலைக் காவலரை பணிநீக்கம் செய்து சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவிட்டாா்.

தென்காசி மாவட்டம் குருவிகுளத்தைச் சோ்ந்தவா் ரத்னகுமாா். சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணிபுரியும் இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இச்சூழ்நிலையில் ரத்னகுமாா், மனைவியை தகாத வகையில் பேசி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாக தெரிகிறது. இது தொடா்பாக அவா் மனைவி அளித்த புகாரின்பேரில் குருவிக்குளம் போலீஸாா் ரத்னகுமாா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் ரத்னகுமாா் நீதிமன்றத்தில் பிணை பெற்றுள்ளாா். அதே வேளையில் துறைரீதியான விசாரணை ரத்னகுமாரிடம் நடத்தப்பட்டது. இதில் ரத்னகுமாா் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ரத்னகுமாரை பணி நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

தொடர்புடைய செய்தி