மர்ம காய்ச்சலால் சிறுவன் உயிர் இழப்பு

629பார்த்தது
மர்ம காய்ச்சலால் சிறுவன் உயிர் இழப்பு
ஆவடி அடுத்த பட்டாபிராம், அண்ணாநகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் இளவரசி (வயது 36). அவரது மகன் தன்வந்த், (வயது 10) மூன்று நாட்களாக காய்ச்சலில் அவதிப்பட்டார்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள மருத்துவர் சிறுவனின் உடல் நிலையை பரிசோதித்த போது, உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து, பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை சுற்றுவட்டாரங்களில், 'டெங்கு' காய்ச்சல் பரவும் நிலையில், மர்மகாய்ச்சலால் பட்டாபிராமில் சிறுவன் உயிரிழந்த சம்பவம், அந்த பகுதி மக்களிடம், அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி மாநகராட்சி நிர்வாகம், தீவிர சுகாதார நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி