அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பொன்னேரியில் பாராட்டு விழா
திருவள்ளூர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் பொன்னேரி ஆண்டார்குப்பம் தனியார் மண்டபத்தில் இன்று வடக்கு மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் வழக்கறிஞரும் மாநிலங்களவை எம்பியுமான வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் தனபால் இருவருக்கும் அவர்களை சால்வை மாலை அணிவித்து கௌரவித்து வரவேற்று பாராட்டு விழா நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர் அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்ராஜா பங்கேற்றனர். மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு செயலாளர் ஜெயச்சந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின் அப்துல் ரஹீம் அம்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் பானு பிரசாத் சுமத்திரகுமார் முத்துகுமார் செல்வகுமார் பொன்னுதுரை ராகேஷ் கோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.