பொன்னேரி ஜமாபந்தியில் நல உதவி பெற வந்த பயணாளி திடீரென எம்எல்ஏ காலில் விழுந்ததால் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நிறைவு விழாவை முன்னிட்டு 190 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா குடும்ப அட்டை முதியோர் உதவித்தொகை விதவை உதவித்தொகை உள்ளிட்ட நல சான்றுகளை பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வழங்கினார் இதில் ஜமாபந்தி அலுவலர் கணேசன் வட்டாட்சியர் சோமசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்
அப்போது நலத்திட்ட உதவி பெற வந்த இளைஞர் ஒருவர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் காலில் விழுந்து பின்னர் நலச்சான்று பெற்று சென்றார் இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது பயனாளிகள் பெரும்பாலானவர்கள் ஆன்லைன் மூலம் சான்றுகளை பெறுவதால் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் குறைந்த அளவே வருகை தந்தனர்