அழகு நிலையத்தில் சாமி விளக்கு எரிந்து கடையில் தீ விபத்து

77பார்த்தது
திருத்தணியில் மூடப்பட்டு இருந்த பெண்கள் அழகு நிலையத்தில் சாமி விளக்கு எரிந்து கடையின் மேற்கூரை எரிந்தது விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.




திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் அரக்கோணம் சாலையில் நகராட்சி கவுன்சிலர் சாந்தி என்பவருக்கு சொந்தமான பில்டிங் கட்டிடம் உள்ளது இதில் கடையில் பெண்கள் அழகு சாதன நிலையம் நடத்தி வருபவர் பவித்ரா இவர் ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை அழகு சாதன நிலையத்தில் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டு விட்டு விளக்கு எரிய விட்டு அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்
இந்த விளக்கானது மேற்கூரை பிளைவுட் எரிந்து கடை முழுவதும் புகைமூட்டம் நிலவியது
இந்த சம்பவத்தை
கண்காணிப்பு கேமராவில் கண்ட அழகு சாதன நடத்தும் உரிமையாளர் பவித்ரா
உடனடியாக திருத்தணி தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் அளித்தார் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் அழகு சாதன நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இடத்தை அணைத்தனர்
அழகு சாதன நிலையத்திலிருந்து புகை வெளியேற்றப்பட்டதால் நெருப்பு அணைக்கப்பட்டதால் அழகு சாதன நிலையத்திலிருந்து மூன்று லட்ச ரூபாய் மதிப்புடைய பொருட்கள் தீயில் விபத்து ஏற்படாமல் இருந்து தப்பியது
இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி