திருவள்ளூர் அருகே பள்ளிகள் திறந்த நிலையில் ஒரே மாணவி மட்டும் அரசு பள்ளியில் கல்வி பயில வந்தார்
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளம்பாக்கம் கிராமத்தில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது இங்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ள நிலையில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து இருந்தது இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பின்னர் 37 நாட்கள் கடந்து பள்ளி இன்று திறக்கப்பட்ட நிலையில் ஒரே மாணவி மட்டுமே பள்ளிக்கு வந்தார் அந்த மாணவிக்கும் தற்கால ஆசிரியர் மட்டுமே கல்வி கற்றுத் தருகிறார் இப்பள்ளியில் நிரந்தர ஆசிரியர் வேறு அரசு பள்ளிக்கு பணி மாற்றம் செய்து சென்று விட்டதால் தான் இடைநிலை ஆசிரியராக கல்வி கற்றுத் தருவதாக தெரிவிக்கிறார் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்காமல் தனியார் பள்ளியில் சேர்ப்பதா ல் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாகவும் சமீபத்தில் 28 லட்ச ரூபாய் மதிப்பில் பள்ளிக்கு புதிய கட்டிடம் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் சமையலறை கட்டிடம் 48 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவறை கட்டிடம் என கட்டப்பட்ட இந்த பள்ளியில் ஒரே மாணவி மட்டுமே படிக்கும் நிலை தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது
கிராமப்புற மாணவர்கள் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க ஆர்வம் காட்டாமல் உள்ளதால் பொன்னேரி கும்மிடிப்பூண்டியில் பல அரசு பள்ளிகளில் இந்த நிலைதான் உள்ளது