மார்த்தாண்டம்: அழுகிய நிலையில் சடலமாக கிடந்த டிரைவர் (VIDEO)

508பார்த்தது
மாமூட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் அருண் (26). டிரைவர். அருணின் 3 வயதில் தந்தை, தாய், தங்கை ஒரு வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் பாட்டியிடம் வளர்ந்தார். பாட்டியும் தற்போது உயிரிழந்தார். அருணின் வீடு கடந்த 3 நாட்களாக திறக்காமல் பூட்டிய நிலையில் காணப்பட்டது. நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து மார்த்தாண்டம் போலீசார் வீட்டின் கதவை உடைத்துப் பார்த்த போது அருண் மின்விசிறியில் தூக்கில் தொங்கி சடலமாக காணப்பட்டார். உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி