நெல்லை: மக்களிடம் மனுக்களை பெற்ற எஸ்பி
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (நவம்பர் 13) மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் கலந்து கொண்டு 17 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் காவலர்கள் கலந்து கொண்டனர்.