தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகில் நாளை (டிசம்பர் 30) காலை 10:30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ள வள்ளியூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் லாசர் இன்று (டிசம்பர் 29) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.