நெல்லை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே அடையகருங்குளத்தில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு ஆம்னி காரை சோதனை செய்தபோது அதில் 560 கிலோ ரேசன் அரிசி கடத்தி கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. எனவே போலீசார் காரை ஓட்டி வந்த இசக்கி முத்துவை கைது செய்து அரிசியை பறிமுதல் செய்தனர்.