கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

67பார்த்தது
கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
கல்வி உதவித்தொகை - கல்வி உபகரணம் வழங்கும் விழா

திருநாவுக்கரசர் நற்செயல் மன்றம் நடத்தும் திருஞானசம்பந்தர் கல்வி அறக்கட்டளை சார்பாக கல்வி உதவித் தொகை வழங்கும் விழா
திருநகர், கதீட்ரல் காலனியில் பைம்பொழில் கு. பாலசுப்பிரமணியன் நினைவு நூலகம் அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருஞானசம்பந்தர் கல்வி அறக்கட்டளை பொறுப்பாளரும், நூலகத்தின் அமைப்பாளருமான ஹரிஹர கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார்.
விழா நிகழ்வுகளை மாணவி மோனிகா தொகுத்து வழங்கினார்.
விழாவில் சமூக ஆர்வலர், முன்னாள் ஆசிரியர் செல்வராஜ் முன்னிலை வகித்து மாணவர் பருவத்தின் கடமைகளை எடுத்துக்கூறி, ஆசிரியர்களின் சமூகப் பங்களிப்பை சுட்டிக்காட்டி உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள்
சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொண்டு திருஞானசம்பந்தர் கல்வி அறக்கட்டளை சார்பாக கல்வி உதவித் தொகையினை வழங்கி விழா சிறப்புரை ஆற்றினார்.
விழாவில், மணிப்பிள்ளை, பாரத ஸ்டேட் வங்கி, பணி நிறைவு பெற்ற வள்ளிநாயகம்,
'வேல்டு லிங்ஸ்' மனோகரன், மதிதா பள்ளி உன்னால் தலைமையாசிரியர் வேல்முருகன், பொறியாளர் செந்தில்நாதன், செந்தில் ஸ்டூடியோ செந்தில், ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழா நிறைவாக மன்றத்தின் துணைச் செயலாளர் சிவக்குமார் நன்றியுரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி