திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகின்ற 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவானது தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவில் ஒன்றாகும். இந்த திருவிழாவினை முன்னிட்டு இன்று கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இந்த பணிகளை கோவில் நிர்வாகிகள் கண்காணித்தனர்.