திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் தலைவராக மூன்றாவது முறையாக ராஜேஷ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர் சங்கம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.