நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை கே. டி. சி நகரை சேர்ந்த முகம்மது யாசன் என். ஜி. ஓ காலனி அழகர் நகர் சேனைத்தலைவர் சமுதாய கூடம் அருகில் நிறுத்தி வைத்திருந்த சுமார் 80, 000 மதிப்புள்ள பைக்கை காணவில்லை. முகமது யாசன் அளித்த புகாரில் போலீசார் விசாரித்ததில் ஐயப்பன் என்பவர் தான் திருடியது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்து அவரிடமிருந்து இன்று பைக்கையும் பறிமுதல் செய்தனர்.