நீட் தேர்வில் பாளை பள்ளி மாணவன் சாதனை

56பார்த்தது
நீட் தேர்வில் பாளை பள்ளி மாணவன் சாதனை
நீட் தேர்வு முடிவுகள் நேற்று (ஜூன் 4) வெளியானது. இதில் பாளை குலவணிகர் புரத்தைச் சேர்ந்த புஷ்பலதா பள்ளி மாணவன் ஜாசன் சந்திரசிங் என்பவர் 720 - க்கு 715 மதிப்பெண்கள் பெற்று நெல்லை மாவட்டத்திலேயே முதல் மாணவனாக சாதனை படைத்துள்ளான். இந்த மாணவன் கொக்கிர குளத்தில் உள்ள ஆகாஷ் இன்ஸ்டியூட் -டில் ஒரு வருடம் நீட் பயிற்சி பெற்றுள்ளான். சாதனை படைத்த மாணவனை அவருடைய பெற்றோர்கள் டாக்டர் ஜான்சிங் மற்றும் டாக்டர் மஞ்சுளா ஜான்சிங் ஆகியோர் இனிப்புகள் வழங்கி இன்று பாராட்டினர். டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்வதே எனது நோக்கம் என மாணவன் தெரிவித்தான்.

தொடர்புடைய செய்தி