திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலராக சந்தீப் நந்தூரி உள்ளார். அவர் ஏற்கனவே திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 29) ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சந்தீப் நந்தூரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.