நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கணேசபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் யூசுப் அலி. இவர் எலக்ட்ரீசியன் ஆக உள்ளார். இவரது மனைவி ஜீனத். இவர்களுக்கு சபீர் உர்பானி என்ற மகனும், முகமது மஹ்ரூபா என்ற மகளும் உள்ளனர். மகன் சபீர் உர்பானி மேலப்பாளையத்தில் உள்ள கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வருடம் பிளஸ் 2 முடித்துள்ளார். இவர் டாக்டராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த வருடம் நீட் தேர்வு எழுதி 720 க்கு 621 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவனை அவருடைய பெற்றோர்கள் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர். மேலும் இந்த மாணவன் மருத்துவராகி ஏழை எளிய மக்களுக்கு சேவைகள் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.