நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சியில் தூய்மை பணிக்காக 2 டிராக்டர்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. இதை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி புதியதாக வாங்கிய டிராக்டர்களை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் கோபி கோபாலக் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.