திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் கொலை முயற்சி வழக்கில் நேற்று வழக்கறிஞர் நயினார் முஹம்மதை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து நெல்லையில் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டம் நடத்திய நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து வழக்கறிஞர் நயினார் முஹம்மது நேற்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.