திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் பறவை கிராம முன்னேற்ற சங்க நிர்வாகிகள் நேற்று (டிசம்பர் 30) மனு அளித்துள்ளனர். அதில் கூந்தங்குளம் கிராமத்திற்கு ஜனவரி மாதத்தில் ஏராளமான பறவைகள் வந்து செல்லும். எனவே குளத்தில் தண்ணீர் இல்லாததால் மணிமுத்தாறிலிருந்து குளத்திற்கு தண்ணீர் கிடைத்திட ஆவணம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.