திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு சந்திப்பில் இன்று (அக்டோபர் 30) காலை நடந்த விபத்தில் கனிம வளம் ஏற்றி வந்த லாரி மோதி காவல்கிணறு ஹோண்டா ஷோரூம் மேலாளர் அமிர்தபிள்ளை சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பணகுடி போலீசார் விபத்து ஏற்படுத்திய கனிம வள லாரி டிரைவர் சுபி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் காவல்கிணறு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.