திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் கடற்கரை பகுதியில் இன்று (ஆக.,24) காலை லட்சக்கணக்கான கிளாத்தி வகை மீன்கள் கரை ஒதுங்கியது. இதனால் அப்பகுதிக்கு சென்றவர்கள் மீன்களை பார்த்து பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில் குமரி சின்னமுட்டம் பகுதியில் அதிகளவில் கிளாத்தி மீன்கள் பிடிக்கப்பட்டு அவை விற்பனை ஆகாததால் மீண்டும் கடலில் கொட்டப்பட்டுள்ளன.
அந்த மீன்களே கூடங்குளம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கரை ஒதுங்கிய மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.