திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் செப்பறை அழகிய கூத்தர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று (ஜூலை 11) தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு தாழையூத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேரோட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.