சுகன்யான் திட்டத்தில் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் ராக்கெட்களில் பயன்படுத்தப்படும் சி. இ. 20 கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை ஓட்டம் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 5வது கட்டமாக 1700 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டு நேற்று இதற்கான கவுண்டவுன் ஆரம்பிக்கப்பட்டு சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடந்ததாக இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்தார்.