வாலிபர் கொலை வழக்கில் மேலும் 8 பேர் கைது

72பார்த்தது
வாலிபர் கொலை வழக்கில் மேலும் 8 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மீனவ கிராமமான கூத்தங்குழியை சேர்ந்த அஜித் என்ற வாலிபர் கடந்த 2 ஆம் தேதி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஏற்கனவே 5 பேரை நேற்று முன்தினம் கைது செய்தார். இதை தொடர்ந்து நேற்று ரகுமான், அஞ்சிலோ, ஜூலியஸ், அஜய், ரோஜன், செல்வா, கில்பர்ட், பார்த்திபன் ஆகிய 8 பேரை கைது செய்து அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி