தூத்துக்குடியை சேர்ந்த மாணவன் தேவேந்திரராஜா அரிவாளால் வெட்டப்பட்ட விவகாரம் குறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று அளித்த பேட்டியில், மாணவனை வெட்ட வந்த 3 பேருக்கும் பைக் கொடுத்து அனுப்பியது யார்? வெட்டிய பிறகு அவர்கள் திரும்பி செல்ல கார் அனுப்பியது யார்? என்பதை போலீஸ் புலனாய்வு செய்து அவர்களையும் கைது செய்ய வேண்டும். மாணவனின் குடும்பத்துக்கு அரசு உதவ வேண்டும் என்றார்.