நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு என் வாக்கு என் உரிமை என்ற தலைப்பில் நெல்லை மாவட்ட சாரணர் சாரணிய இயக்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சாரண சாரணிய இயக்க மாணவர்கள் கலந்து கொண்டு வாக்காளர்களிடம் தேர்தல் மற்றும் வாக்குரிமை தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பதாகைகளுடன் ஊர்வலம் சென்றனர்.