நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி திமுக கவுன்சிலர்கள் பிரேம்குமார் சண்முகவேல் ஆகிய இரண்டு பேர் திமுகவில் இருந்து விலகி நேற்று அதிமுக மாவட்ட செயலாளர் இசக்கிசுப்பையா தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே இருவரும் அதிமுக சார்பில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆனால் சமீபத்தில் அவர்கள் திமுகவில் இணைந்து நிலையில் தற்போது மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.