நெல்லை மடத்துப்பட்டி கிராமத்தில் உள்ள டிடிடிஏ அரசு துவக்கப்பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சரிவர பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி ஊர் பொதுமக்கள் சார்பில் இன்று பள்ளி குழந்தைகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனர். தலைமை ஆசிரியர் மது அருந்தி விட்டு பள்ளிக்கு வருவதாகவும் கூறப்படுகிறது.