நெல்லை டவுனைச் சேர்ந்த தொழிலாளி ரகுவை வழக்கறிஞர் புலித்துரை என்பவரது தரப்பினர் துப்பாக்கியை காட்டி மிரட்டுவதாக ரகுவின் மனைவி டவுன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நீதி கேட்டு ரகு மற்றும் குடும்பத்தினர் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் நடத்தினர். திடீரென ரகு கத்தியால் தனது கையை கிழித்தார். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி ஆட்சியரின் உதவியாளரிடம் புகார் அளிக்க ஏற்பாடு செய்தனர்.