நெல்லை மாவட்டம் மானூர் அருகிலுள்ள களக்குடி கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. புதிய கடையை நெல்லை சட்ட மன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார். ஊராட்சிமன்ற தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார்.
திமுக ஒன்றிய செயலாளர் அன்பழகன், மானூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்கிருஷணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்னல் அறக்கட்டளை நிறுவனர் எஸ். மில்லத் இஸ்மாயில் முதல்விற்பனையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மதிமுக செய்தி தொடர்பாளர் மின்னல் முஹம்மது அலி, கூட்டுறவு சங்கசார்பதிவாளர் முத்துராஜ் கல்வி மேம்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ஜனாப். முஹம்மதுஅலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்