நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பான வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புகழேந்தி சாமிநாதன் இருவரும் இன்று நெல்லை தாமிரபரணி ஆற்றில் நேரடியாக ஆய்வு செய்ய உள்ளனர். இதை ஒட்டி வண்ணாரப்பேட்டை அரசு விருந்தினர் மாளிகைக்கு தற்போது நீதிபதி புகழேந்தி வருகை தந்துள்ளார். அவரை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உள்பட அதிகாரிகள் வரவேற்றனர். மற்றொரு நீதிபதி சாமிநாதன் ஏற்கனவே வந்துவிட்டார்.