கட்சி கூட்டம் குறித்து மாநகர செயலாளர் பெருமிதம் தெரிவித்தார்

169பார்த்தது
கட்சி கூட்டம் குறித்து மாநகர செயலாளர் பெருமிதம் தெரிவித்தார்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திமுக கழக இளைஞரணி செயலாளர் இளம் தலைவர் அறிவுறுத்தலின்படி நெல்லை மாநகர திமுக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தலைமையிலான திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நெல்லை பகுதியில் வைத்து 18-வது வட்ட செயலாளர் வேல்முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பல்க் குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தலைமை கழக பேச்சாளர் போடி காமராஜ், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மாலைராஜா அவர்கள், தலைமை கழக பேச்சாளர் நெல்லை ரவி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். நெல்லை பேட்டை பகுதி செயலாளர் நமச்சிவாயம் கோபி அவர்கள், பாளை பகுதி செயலாளர் அன்டன் செல்லத்துரை அவர்கள், மாநகர பொருளாளர் அண்ணாத்துரை அவர்கள், மாவட்ட பிரதிநிதி A. M. அலி, மாநகர பிரதிநிதி பிரான்சிஸ், வட்ட செயலாளர்கள் பத்மராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாநகர இளைஞரணி அமைப்பாளர் மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி கோட்டையப்பன் அவர்கள் செய்திருந்தார் என்று நெல்லை மாநகர செயலாளர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி