நெல்லை மாநகரப் பகுதியில் இன்று பிற்பகல் வரை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் திடீரென மாநகரின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக தியாகராஜநகர் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டை சமாதானபுரம் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுமார் 20 நிமிடம் மிதமான மழை கொட்டி தீர்த்தது.