தூத்துக்குடியை சேர்ந்த மாணவன் தேவேந்திரராஜா அரிவாளால் வெட்டப்பட்ட விவகாரம் குறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு இன்று நெல்லையில் அளித்த பேட்டியில் மத வெறியர்கள் மற்றும் ரவுடிகளை கண்காணிக்க குழு அமைத்திருப்பதை போன்று ஜாதி வெறியர்களை கண்காணிக்க தமிழக அரசு சிறப்பு குழு ஒன்றை அமைக்க வேண்டும் ஜாதி மோதல்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.