குடிநீரில் கிடந்த பாம்பு; நெல்லையில் அதிர்ச்சி

80பார்த்தது
நெல்லை தச்சநல்லூர் செல்வ விக்னேஷ் நகர் மல்லிகை தெருவில் ஒருவரது வீட்டில் நேற்று மாநகராட்சி குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது சிறிய தண்ணீர் பாம்பு ஒன்று வந்துள்ளது. இதைக்கண்ட அந்த வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தண்ணீர் பாம்பை ஒரு டப்பாவில் அடைத்து அப்புறப்படுத்தினார்கள். இது பற்றி தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி