நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே விஜயநாராயணம் பகுதியில் இந்திய கடற்படை வளாகத்தின் அருகில் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு 9ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையில் இன்று ஒரு மாணவன் புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த சிறிய அரிவாளை எடுத்து மற்றொரு மாணவனை தலையில் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது காயமடைந்த மாணவன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.