திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் வருகின்ற 10. 06. 2024 அன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுவதையொட்டி, பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.