நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாநகரக் காவல் ஆணையர் மூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது. பின்பு சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை நேரில் அழைத்து நற்சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி மேலும் சிறப்பான முறையில் பணியாற்ற பாராட்டினார்.