நடிகர்
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் சமீபத்தில் மிகப்பெரும் வெற்றி அடைந்தது. அதைத் தொடர்ந்து தனது 170 வது படத்தில்
ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நெல்லை பணகுடியில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி
ரஜினிகாந்த் அங்கு காரில் வந்த போது சாலையில் திரண்ட ரசிகர்களை பார்த்து காரில் இருந்தபடி கையசைத்து கும்பிட்டார். அப்போது ரசிகர்கள் தலைவா தலைவா என்று உற்சாகமோடு கோஷமிட்டனர்