நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜனவரி 10) சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அனைத்து துறை அலுவலர்களுக்கும் தனித்தனியாக பொங்கல் வைத்து கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் திருநங்கைகளுக்கு தனியாக பொங்கல் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே திருநங்கைகள் உற்சாகமுடன் ஆடிப்பாடி பொங்கல் வைத்து வழிபட்டனர்.