தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்தார். நேற்று அவர் சரக காவல் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலை இன்று அவர் தலைமையில் காவலர் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. காவலர்கள் முதல் அதிகாரிகற் வரை பலர் கலந்து கொண்டு காவலர் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் தங்களுக்கான பணி மாறுதல் கேட்டு விண்ணப்பித்தனர்.