பாளையங்கோட்டை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயராக பொறுப்பு வகித்து வரும் ஆயர் அந்தோணிசாமி சவரிமுத்து அவர்களை போப் ஆண்டவர் 14 ஆம் லியோ அவர்கள் மதுரை உயர் மறை மாவட்ட பேராயராக நியமித்துள்ளார். பேராயரின் தலைமையின் கீழ் திருநெல்வேலி கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய 7 மறை மாவட்டங்கள் இயங்கும். ஆகஸ்ட் மாதம் பதவி ஏற்க உள்ள பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து அவர்களுக்கு தமிழ்நாடு திருச்சபை பணியாளர்கள் நல தொழிற்சங்கம் பொதுச்செயலாளர் சகோ. ஜெபசிங் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.