நெல்லை தாமிரபரணி ஆற்றில் இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் புகழேந்தி சாமிநாதன் இருவரும் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். மீனாட்சிபுரத்தில் ஆய்வை முடித்துக் கொண்டு நீதிபதிகள் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் வழியாக சிந்து பூந்துறைக்கு சென்றனர் அப்போது நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளின் கார் ஒட்டுமொத்தமாக ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து சென்றன. இதனால் சந்திப்பு பேருந்து நிலையம் அருகே பரபரப்புடன் காணப்பட்டது.