நெல்லை ஆட்டோ டிரைவரின் மகள் நீட் தேர்வில் சாதனை

550பார்த்தது
நெல்லை ஆட்டோ டிரைவரின் மகள் நீட் தேர்வில் சாதனை
நெல்லை டவுனனை சேர்ந்த இஸ்மாயில் கனி கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகள் சமீகா பர்ஹானா டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் பள்ளியில் பிளஸ் டூ முடித்துள்ளார். இந்த ஆண்டு நீட் தேர்வில் 720 -க்கு 542 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். அரசு பள்ளியில் படித்ததால் தமிழக அரசின் 7. 5 சதவீத இட ஒதுக்கீட்டில் இவருக்கு டாக்டர் படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி