நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு பாபநாசம் காரையாறு போன்ற அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாபநாசம் அணைப்பகுதியில் நேற்று ஒரே நாளில் 10 மில்லி மீட்டர் மழை பெய்திருப்பதால் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது. நேற்று நீர்மட்டம் 92 அடியாக இருந்த நிலையில் இன்று 93 அடியாக அதிகரித்துள்ளது.