டவுண் ஜாகிர் உசேன் கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. கடும் போராட்டத்துக்கு பின் உடலை உறவினர்கள் நேற்று பெற்று கொண்டனர். இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் உயிரிழந்த ஜாகிர் உசேன் இல்லம் சென்று அவரது மகன் ரகுமான் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதில் எஸ்டிபிஐ நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.