நெல்லை தொகுதி எம்பி ராபர்ட் புரூஸ் இன்று (செப்.,22) நாகர்கோவிலில் இருந்து நெல்லை மாவட்டம் முக்கூடல் சென்றார். அப்போது காரில் செல்லும் வழியில் சுங்கச்சாவடி அருகில் ஆட்டோ ஒன்று விபத்தில் சிக்கியது. இதை கவனித்த எம்.பி., ஆட்டோவில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர் அவர்களை மருத்துவமனை அழைத்து செல்ல ஏற்பாடுகளை செய்தார். ராபர்ட் புரூஸ்சின் இந்த மனிதாபிமான செயல் பாராட்டை பெற்றது.