திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் சம்பந்தப்பட்ட நிகிதா என்ற பெண் அரசு கல்லூரியில் பணிபுரிவதாக தகவல் வெளியானது. நிகிதா மீது அடுத்தடுத்து பண மோசடி புகார் எழுந்து வரும் நிலையில் நெல்லைக்கு இன்று வந்த உயர் கல்வி அமைச்சர் கோவி செழியனிடம் நிகிதா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என நிருபர்கள் கேட்டதற்கு, துறை ரீதியான நடவடிக்கைக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது விரைவில் நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.